×

அமெரிக்காவில் கடும்பனி: 2,270 விமானங்கள் ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடுமையான பனி, மழை, குளிர்காற்று வீசுவதால் பொது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் ெகாண்டாட்டங்களுக்கு மத்தியில் விமானம், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக விமானக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘சிகாகோ, டென்வர் போன்ற நகரங்களில் கடுமையான பாதிப்புகள்  உணரப்படுகின்றன. அந்த நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்களில் நான்கில்  ஒருபங்கு கூட செல்ல முடியவில்லை. சில விமானங்களுக்கு மட்டும் வானிலை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 2,270 அமெரிக்க விமானங்களை ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமான நிலையங்களில் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளதால், பலமணி நேரம் தாமதமாக விமானங்கள் புறப்பட்டு சென்றன’ என்று தெரிவித்துள்ளது….

The post அமெரிக்காவில் கடும்பனி: 2,270 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : United States ,WASHINGTON ,Christmas ,Rouge ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடந்து வரும்...